• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அவினாசிலிங்கம் கல்லூரில் இயல், இசை, நாடகம வழியே நடந்த கிறிஸ்துமஸ் விழா !

December 21, 2018 தண்டோரா குழு

கோவை அவினாசிலிங்கம் மகளிர் கல்லூரியில் இயல், இசை, நாடகம வழியே நடந்த கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 25ம் தேதி கிருஸ்துமஸ் விழா கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி கோவை அவினாசிலிங்கம் மகளிர் கல்லூரியில் இன்று இயல், இசை, நாடகம வழியே நடந்த கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்கமாக பேராசிரியர் முனைவர். வசந்தாகல்யாணிடேவிட வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவிகள் ஏசு கிறிஸ்த்துவின் பிறப்பு நிகழ்ச்சியினை இசையோடு கலந்த நாடகத்தினை நிகழ்த்திக்காட்டினர்.

விழாவில் அவினாசிலிங்க பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ப.ரா.கிருஷ்ணகுமார் மாணவியர்களின் திறன்களை ஊக்கப்படுத்தியும், ஏசு கிறிஸ்த்துவின் சிறப்புகளையும் எடுத்துரைத்து தலைமையுரைஆற்றினார். விழாவில் கோவை திருமண்டல அருட்போதகர் சுநஎ.சார்லஸ் அருமைநாயகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிறிஸ்த்துமஸ் விழா நற்செய்தியினை வழங்கினார்.

அப்போது பேசிய அவர்,

உலகில் அமைத நிலவவேண்டும், உலகம் முழுவதும் உள்ள எல்லா மக்களும் இணைந்து கொண்டாடும் விழாவாக கிருஸ்துமஸ் அமைகின்றது. ஒருவரும் தோற்றுப்போகும் தன்மையில்லாமல், நித்திய ஜீவனை அடையவேண்டும் என்பதை இறைவன் விரும்புகிறான். மக்களுக்காக தன் ஜீவனைகொடுத்து நம் பாவங்களை நீக்குபவராக விளங்குகிறார். தன் கரம் நீட்டி தன்னையே நமக்காக அளிப்பதாகவும், அன்பை அடிப்படையாகக் கொண்டு அனைவரையும் நேசிக்கவேண்டும் என்று அவர் கூறினார். மேலும், இயேசு கிறிஸ்த்துவின் பிறப்பு நோக்கத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார்.

ஸ்ரீ அவினாசிலிங்கம் கல்விநிறுவனத்தின் அறக்கட்டளை இயக்குனர் பேராசிரியர் முனைவர் சரோஜா பிரபாகரன் வாழ்த்துரை வழங்கினார். விழாவின் நிறைவாக பேராசிரியர் முனைவர் ஆ.சில்வியாசுபப்பிரியா நன்றியுரை வழங்கினார்.

மேலும் படிக்க