• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அருகே 350 சவரன் தங்க நகை வழிப்பறி – போலீசார் விசாரணை

January 7, 2019 தண்டோரா குழு

கோவை அருகே காரில் கொண்டுவரப்பட்ட ரூ.98 லட்சம் மதிப்புள்ள 350 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கல்யாண் ஜுவல்லரியிலிருந்து கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள கல்யாண் ஜூவல்லரிக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை பணியாளர்கள் வியாபாரம் தொடர்பாக அடிக்கடி கொண்டு வருவது வழக்கம்.அந்த வகையில் இன்று கல்யாண் ஜூவல்லரி ஊழியர்கள் அர்ஜுன், வில்பர்ட் ஆகிய இருவரும் சைலோ கார் மூலம் கேரளாவில் இருந்து கோவை நோக்கி கிட்டத்தட்ட 350 சவரன் தங்க நகையும், 243.320 கிராம் வெள்ளிப் பொருட்களையும் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், காக்காசாவடியில் உள்ள ஆர்யாஸ் ஹோட்டல் அருகே வரும்பொழுது ,திடீரென அவர்கள் வந்த காரின் மீது இரண்டு கார்கள் மோதியது. அப்போது அந்த இரண்டு காரில் இருந்து இறங்கி வந்த 10 பேர் கொண்ட கும்பல் கல்யாண் ஜுவல்லரி நிறுவனத்தின் கார் கண்ணாடியை உடைத்தனர்.பின்னர், காரில் இருந்த நகைகளைகொள்ளையடித்து கோவை வழியாக தப்பி சென்றுள்ளனர். பறிபோன நகைகளின் மதிப்பு ரூ. 98 லட்சம் வரை ஆகும் என கூறப்படுகிறது.

இதையடுத்து, இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த க.க.சாவடி காவல்நிலைய போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க போலீசார் சி.சி.டி.வி. கேமராக்களை கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
மர்ம நபர்கள் வழிமறித்து, தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க