• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அருகே வாலிபர் குத்தி கொலை – சகோதரியின் கள்ளக்காதலன் கைது

March 22, 2023 தண்டோரா குழு

கோவை அடுத்துள்ள வேடப்பட்டி நம்பியழகம்பாளையத்தை சேர்ந்தவர்
ஜெகன்ராஜ்(33).பெயிண்டர். இவரது அக்காவுக்கும், அதே பகுதியை சேர்ந்த மதன்ராஜ்(32) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ஜெகன்ராஜுக்கும், மதன்ராஜுக்கும் இடையே அடிக்கடி தகராறு எழுந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதேபோல், நேற்று முன் தினம் இரவு ஜெகன்ராஜ், மதன்ராஜ் வீட்டுக்கு சென்று அவரது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அங்கு வந்த மதன்ராஜை, ஜெகன்ராஜ் தாக்கியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மதன்ராஜ் வீட்டில் இருந்து கத்தியை எடுத்து ஜெகன்ராஜை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மதன்ராஜ் அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏற்றி அந்தப் பகுதியில் உள்ள மின் மயானம் அருகே இறக்கி விட்டார். பின்னர் மதன்ராஜ் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஜெகன்ராஜை பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரியவந்தது. இது தொடர்பாக வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வடவள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான மதன்ராஜ் தேடி வந்தனர். அவரை நேற்று தேனி அருகில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க