• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அருகே காவல்துறை வாகனம் மோதி கணவன்,மனைவி பலி

July 12, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சோமனூர் அடுத்த சாமளாபுரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ்.விவசாயியான இவர் அவரது மனைவி தேவியுடன் இருசக்கர வாகனத்தில் தென்னம்பாளையம் அருகே உள்ள அரசூருக்கு சென்று விட்டு,சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் திரும்பும் போது கணியூர் சுங்கச்சாவடியில் உள்ள டீக்கடையில் டீ குடித்துள்ளனர்.

பின்னர் இருசக்கர வாகனத்தை எடுத்துள்ளனர்.அப்போது,அவினாசியில் இருந்து கோவைக்கு கைதிகளை ஏற்றி வந்த காவல்துறை வாகனம் இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது.இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.இருவரையும் மீட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அனால் வழியிலேயே பரிதாபமாக நடராஜ் உயிரிழந்தார்.அவரது மனைவி தேவிக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.எனினும் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.காவல்துறை வாகனம் வேகமாக வந்து மோதியதாகவும்,அந்த இடத்தில் அடிக்கடி விபத்து நடைபெறுவதால் அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும்,விபத்து குறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறை வாகனம் மோதி தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க