• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அமரர் ஊர்தியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து.!

September 25, 2021 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இலவச அமரர் ஊர்தியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

கோவை அரசு மருத்துவமனையின் பிணவறைக்கு வரும் உடல்கள் இலவச அமரர் ஊர்தி மூலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.இதனால் இந்த ஊர்திகள் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்படுவது வழக்கம். இப்படி மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிணவறை அருகே நிறுத்தப்பட்டிருந்த அமரர் ஊர்தி நேற்று நள்ளிரவு திடீரென தீப்பற்றி எரிந்தது.

பின்னர் அப்பகுதியில் இருந்தவர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். பின்னர் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.மேலும் பந்தய சாலை போலீசார் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தீ பற்றும் போது அருகிலிருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டதால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது.

மேலும் படிக்க