• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றியதால் 2 வயது பெண் குழந்தைக்கு எச்ஐவி பாதிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் புகார்

February 21, 2019 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட இரத்தம் இரண்டு வயது பெண் குழந்தைக்கு செலுத்தப்பட்டதாக புகார் வந்த நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க வில்லை என குற்றம்சாட்டி பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருச்சி மணப்பாறையை இந்த தம்பதிக்கு கடந்த 6.2.17 அன்று திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இரு குழந்தைகளும் எடை குறைவாக இருந்ததால் 32 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.பின்னர் வீட்டில் வைத்து பராமரித்து வந்துள்ளனர். கடந்த 11.7.18 அன்று பெண் குழந்தைக்கு சளி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. உடனே குழந்தையை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஆபத்தாக உள்ளது என கூறி ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் இருதயத்தில் ஓட்டை இருப்பதாக கூறி உள்ளனர். மேலும் ரத்தம் ஏற்றி உள்ளனர் ரத்தம் ஏற்றிய சில
மாதங்களில் இருந்து குழந்தையின் உடலில் தடுப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தையை மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை செய்ததில் குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்தது. கோவை அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தம் குழந்தைக்கு தவறுதலாக ஏற்றப்பட்டதால் தான் குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டினர்.ஆனால் இந்த குற்றச்சாட்டை அரசு மருத்துவமனை டீன் அசோகன் மறுத்துள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என குற்றம்சாட்டி பாதிக்கப்பட்ட குழந்தையுடன் பெற்றோர் இருவரும் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

அப்போது இதுகுறித்து பேசிய குழந்தையின் தந்தை,

காலை ஒரு முறை மட்டுமே மருத்துவர் வந்து செல்வதாகவும், உடலில் ஏற்பட்டுள்ள தடுப்புகளுக்கும் , சலி தொல்லைக்கும் மட்டுமே மருந்து அளிப்பதாகவும் எச்.ஐ.விக்காக எந்த ஒரு தனி சிகிச்சையும் அளிக்கப்படவில்லை என தெரிவித்தார். சேரியாக சிகிச்சை அளிக்காததால் மருத்துவமனையில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் கூறினார். தங்கள் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இது குறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அசோகன் கூறுகையில்,

குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் இவ்விவகாரம் தொடர்பாக விரைவான அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திற்கும் , சுகாதாரதுறைக்கும் அனுப்பி உள்ளதாகவும் கூறினார்.

மேலும் படிக்க