• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அவதி

May 10, 2021 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனை முதல் நுழைவாயிலில் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.அங்கு கடந்த சில சில தினங்களாகவே சாக்கடை நீர் வெளியேறி வருவதாக குற்றச்சாட்டுகளை எழுந்த நிலையில் அதனை மருத்துவமனை நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று சாக்கடை நீர் அதிக அளவு வெளியேறியதால் அங்கு நடக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் நோயாளிகளும் நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.மக்களின் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தற்காலிகமாக நடை பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

எனினும் தேங்கி நிற்கும் சாக்கடை நீரால் அங்கு துர்நாற்றம் வீசுவதாகவும் கொசுக்கள் அதிகரிப்பதாகவும், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் இதனை உடனடியாக சரி செய்து தரும்படியும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க