October 20, 2020
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது ஆண் குழந்தையின் மூச்சுக் குழாயில் மாட்டிக்கொண்ட கல்லை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்றி பிராங்காஸ்கோபி மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.
திருப்பூர் மாவட்டம் மாதப்பூரை சேர்ந்தவர் முனியாண்டி கூலித்தொழிலாளி இவரது 2 வயது ஆண் குழந்தை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருக்கும்போது கல்லை மூக்கில் நுழைந்து விட்டது.கல் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டதால் மூச்சு விட முடியாமல் சிரமம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பெற்றோர்கள் குழந்தையை அருகில் உள்ள சூலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனை காது மூக்கு தொண்டை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு மேற்கண்ட பரிசோதனையில் மூச்சு குழாயில் கல் மாற்றிக் கொண்டிருப்பது தெரியவந்தது. சுவாசக்குழாய் நூண்ணோக்கி பிராங்காஸ் கோபி கருவி மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் வெளியே எடுக்கப்பட்டது.தற்போது குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அரசு மருத்துவமனை காது மூக்கு தொண்டை பிரிவு தலைவர் அலி சுல்தான் கூறியதாவது,
கல் மூச்சுக் குழாயை அடைத்து கொண்டிருந்ததால் மூச்சுவிட முடியாமல் குழந்தை சிரமத்துக்குள்ளானது.கொஞ்சம் தாமதமாக இருந்தாலும் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிருக்கே ஆபத்தாகும் நிலை ஏற்பட்டிருக்கும் எனவே குழந்தைகளை பெற்றோர்கள் கூர்ந்து கவனித்து அவர்களது நடவடிக்கைகளை ஆராயவேண்டும் குழந்தைகள் விளையாடும் போது கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.