• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் தனிமனித விலகலை கடைபிடிக்க ஸ்டிக்கர்

June 17, 2020 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் தனிமனித விலகலை கடைபிடிக்க ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் தனி மனித விலகலை கடைபிடிப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. குறிப்பாக நோயாளிகள் டிக்கெட் கவுண்டர் மாத்திரை வழங்குமிடம் புறநோயாளிகள் வார்டுகளில் நோயாளிகள் அவர்களின் உறவினர்கள் அதிக அளவில் கூடுகின்றனர்.இவர்கள் தனிமனித விலகலை கடைபிடிப்பதில்லை இதனால் நோயாளிகளுக்கு தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் தனிமனித விலகலை நோயாளிகள் கடைபிடிக்க வகையிலும் புறநோயாளிகள் டிக்கெட் கவுண்டர் நோயாளிகளுக்கான காய்ச்சல் பிரிவு நரம்பியல் பிரிவு குழந்தைகள் நலப்பிரிவு உள்பட 30 நோயாளிகள் பிரிவு வார்டுகளில் 24 மணி நேரமும் செயல்படும் மருந்தகம், நீரிழிவு நோயாளிகளின் மருந்து வழங்கும் இடம் உள்பட 10 பார்மசி பகுதி என பொதுமக்கள் நோயாளிகள் அதிகம் கூடும் வார்டுகளில் தரைகளில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கும் வகையில் தரைகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது.

400க்கும் மேற்பட்ட ஸ்டிக்கர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் உள்ள வார்டுகளில் தரைகளில் ஒட்டப்பட்டுள்ளது இதுதவிர மருத்துவமனைக்கு வரும் நபர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் அடிக்கடி கை கழுவ வேண்டும் உள்ளிட்டவை அடங்கிய விழிப்புணர்வு வாசகங்கள் மருத்துவமனையில் பல்வேறு பகுதிகளில் உள்ள சுவர்களில் வார்டுகளில் ஒட்டப்பட்டுள்ளன.

மேலும் படிக்க