• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் டிராபிக் ராமசாமி காத்திருப்பு போராட்டம்

February 2, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பாக விதி முறை மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் என வலியுறித்தி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கோவை அதிமுக அலுவலகத்தில் இன்று அதிமுக மாநகர் புறநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறுகின்றது. இதற்காக அதிமுக அலுவலகமான இதயதெய்வம் மாளிகை முன்பாக பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விதிமுறை மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற கோரி அதிமுக அலுவலகம் முன்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றார்.

அதிமுக அலுவலகம் முன்பாக மாநகராட்சி அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் எனவும் அதுவரை இப்பகுதியில் இருந்து செல்ல மாட்டேன் என கூறி காத்திருப்பு போராட்டம் நடத்தும் டிராபிக் ராமசாமியுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பிளக்ஸ் பேனரை அகற்றாமல் இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என கூறி காவல் துறையினருடன் டிராபிக் ராமசாமி வாக்குவாத்தில் ஈடுபட்டனர். உடனடியாக விதி மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரை அகற்ற வில்லை எனில் கோவை காவல் துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருப்பதாகவும் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக டிராபிக் ராமசாமியின் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கோவை மாநகர பகுதியில் மட்டும் 40 இடங்களில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.

மேலும் படிக்க