October 14, 2020
தண்டோரா குழு
கோவை அண்ணா பல்கலைக்கழக மண்டல மையத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்குள்ள ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை அண்ணா பல்கலைக் கழகம் 2012 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு கோவை மண்டல வளாகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அண்ணா பல்கலைக் கழகத்தால் பல்வேறு ஆணைகள் மூலம் வெவ்வேறு தேதிகளில் 2015 முதல் பல தவணைகளாக உள்ளீர்ப்பு செய்யப்பட்டு வருகின்றனர்.
தற்போதைய கொரோனோ அச்சுறுத்தல் சூழ்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் பழிவாங்கும் நடவடிக்கையாக உள்ளீர்ப்பு நிலையில் உள்ளமற்றும் வழக்கு உயர்நீதிமன்றம் நிலுவையில் உள்ள நிலையில் பணியாளர்கள் இதுவரைஅரசால் அனுமதிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்த மருத்துவ விடுப்பு ஈட்டிய சிறப்பு தற்செயல் விடுப்பு போன்ற விடுமுறைகள் எடுப்பதைத் தடுக்கும் வகையில் கடந்த 9.10 .2018 அன்று கடிதம் எழுதியுள்ளது மேற்படி சட்ட விரோதமான கடிதத்தைதிரும்ப பெற கோரியும் இப்போதும் பயன்பாட்டில் உள்ள விடுமுறைகளை தொடர்ந்து அனுமதிக்க கோரியும் பல்கலைக்கழக வளாகத்தில் அனைத்துப் பணியாளர்கள் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்டு மேற்படி ஆணையை அண்ணா பல்கலைக்கழகம் திரும்ப பெற வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர்.