• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அண்ணா பல்கலைகழக வளாகத்தில் 154 மரம் வெட்டப்பட்டது – சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

May 15, 2020 தண்டோரா குழு

கோவை அண்ணா பல்கலைகழக வளாகத்தில் துணை மின் நிலையம் கட்ட 154 மரங்கள் வெட்டப்பட்டப்பட்ட சம்பவம் சுற்று சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கோவை வடவள்ளி அடுத்த நவாவூர் பிரிவு அருகே செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைகழகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மியோவாக்கி முறையில் சிறிய காடுகளை உருவாக்கு முயற்சியில் பல்கலைகழகத்துடன் இணைந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நேற்று பல்கலைகழக வளாகத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு அளவீடு செய்ய வந்த மின்சாரத்துறை அதிகாரிகள் அங்கிருந்த சுமார் 154 மரங்களை வெட்டி உள்ளனர். தகவலறிந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டது. மரம் வெட்டுவது குறித்த எந்த அறிவிப்பு எங்களது தெரிவிக்கவில்லை என பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே போல் மின் துறை அதிகாரிகள் கூறும் போது துணை மின் நிலையம் அமைக்க நிலம் வழங்கப்பட்டது, நீண்ட கால திட்டம் அனுமதிக்கப்பட்ட இடம் காலியாக இருந்ததால் அங்கு மரம் நடப்பட்டது. ஆனால் இப்போது பணிகள் துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது அதனால் தான் அளவீடுகள் பணிகள் நடந்து வருகிறது என்றனர்.5 ஆண்டுகள் பாதுகாக்கப்பட்ட மரங்களை வெட்டக்கூடாது அதற்கு பதில் வேறு இடம் ஒதுக்கலாம் அல்லது பல்கலைகழக வளாகத்தில் வேறு இடத்தை தேர்வு செய்யலாம், பெரிதாக வளர்ந்த மரத்தை வெட்டக்கூடாது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க