• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 73 சுதந்திர தினவிழா மாவட்ட ஆட்சியர் கொடியேற்றினார்

August 15, 2019 தண்டோரா குழு

கோவை வ.உ.சி. மைதானத்தில் 73வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ராசாமணி கொடியேற்றினார். தொடர்ந்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர் தியாகிகளை கௌரவித்தார்.

இதை அடுத்து, மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக பாதுகாப்பு திட்டப்பிரிவு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட சமூக நல அலுவலகம், தோட்டக்கலை துறை, தாட்கோ, வேளாண்மைத்துறை, மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை என 15 துறைகளில் 129 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 27 லட்சத்து 7 ஆயிரத்து 251 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராசாமணி வழங்கினார்.

இறுதியாக, பரதநாட்டியம், கோலாட்டம், தேசப்பக்தி பாடல், ஒயிலாட்டம், சிலம்பம், கிராமியப்பாடல், தப்பாட்டம், கரகம், பிரமீட் என பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு இக்கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

மேலும் படிக்க