October 21, 2020
தண்டோரா குழு
கோவையில் 72 குண்டுகள் முழுங்க வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில், நாடு முழுவதும் காவலர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் நாள் காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் வீரமரணமடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து பணியின்போது உயிரிழக்கும் காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி வீரவணக்க நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது.
இதன் ஒருபகுதியாக கோவையில் உள்ள காவலர்கள் நினைவிடத்தில் கோவை மாநகர காவல்துறை மற்றும் மாவட்ட காவல்துறை சார்பாக வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியையா ,காவல் கண்காணிப்பாளர் அருளரசு மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் என மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.இதனை தொடர்ந்து 72குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.