September 16, 2020
தண்டோரா குழு
கோவையில் பிரதமரின் 70 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக 70 கிலோ வடிவலான லட்டை கோவிலில் வைத்து வழிப்பட்டு பாஜகவினர் பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.
கோவையில் திருச்சி சாலை அமைந்துள்ள ரெயின்போ காலனி பகுதியைச் சேர்ந்த பாஜகவினர் பிரதமர் நரேந்திரமோடி எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். செப்டம்பர் 17 நாளை பிரதமர் மோடி அவருடைய எழுபதாவது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இந்தநிலையில் அவர் பல்லாண்டு வாழவும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் தொடர்ந்து செயல்படும் சிவன் காமாட்சி அம்மன் திருக்கோவிலில் இறைவனை வேண்டி வேண்டுதல் வைத்தனர்.
மேலும் பிரதமர் மோடி அவருடைய 70வது பிறந்த நாள் என்பதால் 70 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட லட்டை கோவிலில் வைத்து வழிபட்டு பொதுமக்களுக்கு பிரசாதமாக அளித்தனர். மேலும் பிரதமர் பூரண நலமுடன் இருக்க 70 கிலோ வடிவிலான பிரம்மாண்ட லட்டை பாஜகவினர் செய்து பிரதமரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வைத்து குறிப்பிடத்தக்கது.