• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை !

January 8, 2021 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் முதற்கட்டமாக மருத்துவ பணியாளர்கள் உட்பட முன்கள பணியாளர்கள் 3316 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த பதிவு உள்ளது என கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் காளிதாஸ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம்கள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை,கற்பகம் மருத்துவமனை, கிணத்துக்கடவு மற்றும் சமத்துவ ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 5 இடங்களில் கொரோனா ஒத்திகை முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கோவை அரசு மருத்துவமனையின் பிரதான கட்டிடத்தின் நான்காவது தளத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த காத்திருப்பு அறையுடன் கூடிய பிரத்யேக அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் காளிதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கோவை அரசு மருத்துவமனையில் முதற்கட்டமாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டம் உள்ளது எனவும், கோவை அரசு மருத்துவமனை ஊழியர்கள் 3316 பேருக்கு தடுப்பூசி செலுத்த முன் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

கடந்த ஜனவரி 2 ஆம் தேதி முதல் கட்டமாக கோவையில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க