June 27, 2020
தண்டோரா குழு
கோவையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா ஊரடங்கு நடவடிக்கை காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைவாக தமிழகம் அழைத்துவர வேண்டும். பெட்ரோல்-டீசல் விலையை குறைத்திட வேண்டும்.மின் கட்டணங்கள், டோல்கேட் கட்டணங்களை ரத்துசெய்ய வேண்டும். கொரோனா அபாயம் முடியும்வரை பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். மேலும், அனைத்து கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்க வேண்டும் ஆகிய 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக இன்று (ஜூன்.27) தமிழகம் முழுவதும் சமூக இடைவெளியுடன் கோரிக்கை போராட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்டத் தலைவர் ராஜா உசேன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மேலும்,மாநில பொருளாளர் V.M.அபுதாகிர்,மண்டல செயலாளர் A. முஸ்தபா, வர்த்தகர் அணி மாநில இணைச் செயலாளர் அப்துல் கரீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் சார் இசாக் மாவட்ட செயலாளர் அப்பாஸ்,
உமர் ஷரீப்,வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம் வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சியாஸ் உள்ளிட்டோர் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தினர்.