• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 470 வாக்குசாவடிகள் பதற்றமானவை – மாவட்ட ஆட்சியர் இராசாமணி

April 16, 2019 தண்டோரா குழு

கோவையில் 470 வாக்குசாவடிகள் பதற்றமானவை. அங்கு கூடுதல் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் அரசு ஊழியர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் இராசாமணி,

வாக்கு பதிவிற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. கோவையில் 3070 வாக்கு சாவடிகள் உள்ளன. அதில் 470 வாக்குசாவடிகள் பதற்றமானதாக அறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் மைக்ரோ அப்ஸ்சர்வர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். 1880 வாக்குசாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு 68.16% வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில் 100 % வாக்குகள் பதிவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 45 ஆயிரம் புதிய வாக்காளர்கள் படியலில் இணைக்கப்பட்டுள்ளனர். 150 பறக்கும் படையினர் களத்தில் உள்ளனர். இதுவரை 12 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் மூன்றே கால் கோடி ரூபாய் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா நடக்க இருப்பதாக கூறப்படும் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க