• Download mobile app
12 May 2024, SundayEdition - 3014
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 36வது 16வயதுக்குட்பட்டோருக்கான தேசிய கூடைப்பந்து போட்டி 14ம் தேதி துவங்குகிறது

May 11, 2019 தண்டோரா குழு

36வது 16வயதுக்குட்பட்டோருக்கான தேசிய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடத்தப்படவுள்ளது. இதில் நாடுமுழுவதிலும் இருந்து 700 வீரர்கள் வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.

இந்தியகூடைப்பந்து சம்மேளனம் நடத்தும் 16வயதுக்குட்பட்டோருக்கான ( ஆண்கள், பெண்கள்) 36வது தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கோவை பீளமேடு பகுதியிலுள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி உள்விளையாட்டரங்கில் வருகின்ற 14ம் முதல் 21ம் தேதி வரை நடைபெறவுள்ளது.இப்போட்டிகளில் நாடு முழுவதிலும் இருந்து 25 மாநிலங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் அணிகள் என 700 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், 60தேசிய நடுவர்கள் கலந்துகொள்கின்றனர். இப்போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்திய கூடைப்பந்து அணிக்கு தேர்வு செய்யப்படுவர். கடந்த ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய கூடைப்பந்து போட்டியில் முதல் மூன்று இடங்களை ராஜஸ்தான், மகாராட்டிரா மற்றும் தமிழ்நாடு அணிகள் பெற்றது. 1962ம் ஆண்டில் கோவையில் தேசிய போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்நிலையில், 57ஆண்டுகளுக்கு பிறகு தேசிய போட்டிகளை நடத்தும் வாய்ப்பை தேசிய கூடைப்பந்து சம்மேளனம் கோவைக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இபோட்டிகளுக்கு சிறப்பு ஏற்பாடாக வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் நடுவர்கள் தங்க இடம், உணவு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. .

மேலும் படிக்க