• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 3430 விவசாயிகளுக்கு ரூ.51.45 லட்சம் மதிப்பில் 3.43 லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கல்

May 16, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் ‘தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்’ திட்டத்தின்கீழ் 3430 விவசாயிகளுக்கு ரூ.51.45 லட்சம் மதிப்பில் 3 லட்சத்து 43 ஆயிரம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

இத்திட்டத்தின்கீழ் தேக்கு, ஈட்டி, மகோகனி, மருது, வேம்பு, மலைவேம்பு, நாவல், பெருநெல்லி, செம்மரம், புங்கன், வேங்கை, சந்தனம் போன்ற பல்வேறு தரமான மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றது. இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவதற்காக தமிழக அரசு வனத்துறையின் நாற்றங்கால்களில் ரூ.15 மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இம்மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களின் வரப்புகளிலோ அல்லது குறைந்த செறிவில் விவசாய நிலங்களிலோ நடவுசெய்யலாம். நடவு செய்த இரண்டாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை நல்ல முறையில் பராமரிக்கப்படும் கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.7 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.21 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள், வேளாண்மை விரிவாக்க மையத்திலோ அல்லது உழவன் செயலிவாயிலாக அருகிலுள்ள தமிழ்நாடு வனத்துறையின் நாற்றங்காலில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.கோவை மாவட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டு காரமடை வட்டாரத்தில் 26 ஆயிரத்து 427 மரக்கன்றுகள் ரூ.3.96 லட்சம் மதிப்பிலும், கிணத்துக்கடவு வட்டாரத்தில் 56 ஆயிரத்து 133 மரக்கன்றுகள் ரூ.8.42 லட்சம் மதிப்பிலும், மதுக்கரை வட்டாரத்தில் 15 ஆயிரத்து 659 மரக்கன்றுகள் ரூ.2.35 லட்சம் மதிப்பிலும், பொள்ளாட்சி (வடக்கு) வட்டாரத்தில் 34 ஆயிரத்து 300 மரக்கன்றுகள் ரூ.5.14 லட்சம் மதிப்பிலும், பொள்ளாட்சி (தெற்கு) வட்டாரத்தில் 20 ஆயிரத்து 580 மரக்கன்றுகள் ரூ.3.08 லட்சம் மதிப்பிலும், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் 17 ஆயிரத்து 650 மரக்கன்றுகள் ரூ.2.65 லட்சம் மதிப்பிலும், சர்க்கார்சாமக்குளம் வட்டாரத்தில் 16 ஆயிரத்து 650 மரக்கன்றுகள் ரூ.2.50 லட்சம் மதிப்பிலும், சுல்தான்பேட்டை வட்டாரத்தில் 28 ஆயிரத்து 740 மரக்கன்றுகள் ரூ.4.31 லட்சம் மதிப்பிலும், சூலூர் வட்டாரத்தில் 20 ஆயிரத்து 580 மரக்கன்றுகள் ரூ.3.08 லட்சம் மதிப்பிலும், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் 27 ஆயிரத்து 440 மரக்கன்றுகள் ரூ.4.11 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 3430 விவசாயிகளுக்கு ரூ.51.45 லட்சம் மதிப்பில் 3 லட்சத்து 43 ஆயிரம் மரக்கன்றுகள் இத்திட்டத்தில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க