• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 300 படுக்கைகளுடன் சேவாபாரதி சார்பில் கொரோனா கேர் செண்டர் துவக்கம்

May 22, 2021 தண்டோரா குழு

கோவையில் கொரோனா தொற்று நாள் தோறும் 3000 கடந்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அனைத்து நிரம்பி படுக்கை இல்லாமல் நோயாளிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க கோவைகவுண்டம்பாளையத்தை அடுத்த ஜி.என்.மில்ஸ் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரம் சேவாபாரதி சார்பில் 300 படுக்கைகளுடன் கொரோனா கேர் செண்டர் தொடங்கப்பட்டுள்ளது.இங்கு ஏ சிம்டம்ஸ் உள்ள நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

ஒரு அறையில் இரண்டு பேர் வீதம் அனுமதிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதி இலவசமாக வழங்கப்படுகிறது. அவசரத் தேவைக்காக ஒரு ஆக்ஜிசன் செரிவூட்டி இயந்திரமும் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. மேலும் ஒரே நேரத்தில் 12 நோயாளிகள் ஆக்ஜிசன் வசதி பெரும் வகையில் ஆக்ஜிசன் பேருந்து ஒன்றும் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் 50 க்கும் மேற்பட்ட சேவாபாரதி அமைப்பின் தன்னார்வலர்கள் இங்கு சேவை செய்து வருகின்றனர்.கொரோனா கேர் மையத்தினை கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.இந்த நிகழ்வில் கோயமுத்தூர் தகவல் தொழில்நுட்ப அமைப்பை சேர்ந்த சிங்கை ஜான் கலந்து கொண்டு ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.

மேலும் படிக்க