June 20, 2020
தண்டோரா குழு
கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 255 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 2396 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவையில் புதிதாக இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது.
இதில், 164 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 89 பேர் சிகிச்சையில் உள்ளனர். இறப்பு – 1, கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மட்டும் 127 பேர் சிகிச்சையில் உள்ளனர்.