July 27, 2020
தண்டோரா குழு
கோவையில் ப்ளஸ் டூ மறு தேர்வு நடைபெற்ற 14 தேர்வு மையங்களில் மொத்தம் 23 மாணவ மாணவியர் தேர்வை எழுதினர்.
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வின் இறுதிப் பாடத்துக்கான தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு இன்று தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தேர்வை எழுதுவதெற்கென,கோவை மாவட்டத்தில் ப்ளஸ்2 மறுதேர்வு எழுத 23 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் அவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒப்பணக்கார வீதி,ஆர்.எஸ்.புரம் என 14 தனித்தனி தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.
முக கவசம் அணிந்து தேர்வு எழுத வரும் மாணவ,மாணவிகளின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கபட்டு தேர்வு மையத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.