• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 200 அடி ஆழ கிணற்றுக்குள் லாரி கவிழ்ந்து இருவர் பலி – டிரைவர் உயிருடன் மீட்பு

December 26, 2018 தண்டோரா குழு

கோவை சின்னத்தாடகம் அருகே கிணற்றுக்குள் லாரி விழுந்து இருவர் பலியாகினர். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

கோவை சின்னதடாகத்தை அடுத்த வீரபாண்டி பகுதியில் ராஜப்பன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள 200 அடி ஆழமான கிணற்றில் நேற்று முன்தினம் இரவு டிப்பர் லாரி ஒன்று விழுந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர். கிணற்றில் விழுந்த லாரியில் இருந்து மணி என்பவரை மீட்டு விசாரித்ததில் தனது நண்பர்களான பாலமுருகன்,செல்வன் ஆகியோருடன் லாரியில் வரும்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி விவசாய கிணற்றில் விழுந்ததாக தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து படுகாயம் அடைந்த அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரியின் அடியில் சிக்கியுள்ள இருவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் லாரியை மேலே கொண்டு வந்தால் மட்டுமே அவர்களை மீட்க முடியும் என்பதால் ராட்சத கிரேன் கொண்டு வந்து லாரியை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

இதனிடையே கிணற்றில் இருந்து லாரி மீட்கப்பட்ட நிலையில் பாலமுருகன், செல்வன் இருவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரது உடலையும் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

மேலும் படிக்க