• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 200க்கும் மேற்பட்ட water bowl காவல் நிலையத்திற்கு வழங்கல்!

March 15, 2023 தண்டோரா குழு

ராயல் கேனன் அமைப்பின் சார்பாக 2014ம் வருடம் சென்னையில் விலங்குகள் தண்ணீர் அருந்துவதற்காக 500க்கும் மேற்ப்பட்ட Water bowl தேசிய விலங்குகள் காக்கும் அமைப்பின் சார்பாக கொடுத்துள்ளனர். மேலும் கோவையில் முதல்முறையாக கடந்த வருடம் பிரேசன் மாலில் 200க்கும் மேற்பட்ட water bowl வழங்கினார்கள்.

அதேபோல் ராயல் கேனன் அமைப்பின் சார்பாக தேசிய விலங்குகள் காக்கும் அமைப்பின் நிறுவனர் அருண் பிரசன்னா, இயற்கை மற்றும் மிருகங்கள் பாதுகாப்பு அமைப்பின் சோபனா தலைமையில் water bowl வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணனிடம் 200க்கும் மேற்பட்ட water bowl காவல் நிலையத்திற்கு வழங்கினார்கள்.

அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்களிடம் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்கள். மேலும் ராயல் கேனை் அமைப்பின் சார்பாக தேசிய விலங்குகள் காக்கும் அமைப்பும், இயற்கை மற்றும் மிருகங்கள் பாதுகாப்பு அமைப்பும் இணைந்து இந்த வருடம் முடிவதற்குள் 4000water bowl தருவதற்கான இலக்கை செய்து வருவதாக அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் காவல் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க