July 31, 2023
தண்டோரா குழு
கோவையில் 2 வயது பெண் குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
கோவையை சேர்ந்தவர் 29 வயது இளைஞர்.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.இதனிடையே நேற்று முன் தினம் பெண் குழந்தையின் பிறப்புறுப்பில் ரத்தம்அரசு கசிவதை அவரது தாய் பார்த்துள்ளார்.தொடர்ந்து அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது.இது தொடர்பான புகாரின் பேரில் போத்தனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.விசாரணையில் குழந்தையின் தந்தையே குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தெரியவந்தது.
இதனையடுத்து பெற்ற குழந்தையையே பாலியல் துன்புறுத்திய தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இரண்டு வயது பெண் குழந்தைக்கு தந்தையே பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.