• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 15-18 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி முகாம் – ஆட்சியர் துவக்கி வைப்பு

January 3, 2022 தண்டோரா குழு

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 15 வயது முதல் 18 வயது உள்ள மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றிலிருந்து காக்கும் பொருட்டு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும்
தடுப்பூசிகள் இரண்டு தவணைகள் வழங்கப்பட்டு வருகின்றது.கோவை மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 95 சதவீத மக்களுக்கும் இரண்டாம் தவணை 76 சதவீத மக்களுக்கும்
வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த கட்டமாக 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது.பள்ளிகளில் சிறப்பு மருத்துவக் குழுக்கள் மூலமாக இத்திட்டம்
துவக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

இப்பணியில் 24 மருத்துவ குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை இணைந்து இந்த முகாமினை நடத்துகின்றனர்.முதன்மை கல்வி அலுவலர் மூலமாக அனைத்து பள்ளிகளுக்கும் இது தொடர்பாகஅறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
15- 18 வயதுடைய சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பு மருந்து மட்டுமே வழங்கப்படும்.

கோவை மாவட்டத்தில் 1.61 லட்சம்
பயனாளிகளுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 671
பள்ளிகளில் இத்தடுப்பூசி வழங்கும் முகாம் நடத்தப்படும்.
15-18 வயதுடைய பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த
வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்தி தங்கள் குழந்தைகளை கொரோனா
நோய் தொற்றிலிருந்து காத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க