• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 149 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் -வியாபாரிகள் கடையடைத்து எதிர்ப்பு

April 6, 2019 தண்டோரா குழு

கோவையில் தேர்தல் பறக்கும் படையினர் மூலம் கொண்டு செல்லப்பட்ட 149 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்தனர். இதனை கண்டித்து நகர் முழுவதும் உள்ள நகை கடைகளை அடைத்து தங்க நகை வியாபாரிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரிங்க்ஸ் எனும் நிறுவனத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு கிளைகள் இயங்கி வருகின்றன. தங்க பெட்டகம் போன்று செயல்பட்டு வரும் அந்த நிறுவனத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தங்க நகை உற்பத்தியாளர்கள் தங்களுக்கு சொந்தமான தங்க கட்டிகளை சேகரித்து வைத்து வருகின்றனர். இந்நிலையில் கோவை சவுரிபாளையம் பகுதியில் உள்ள அந்நிறுவனத்தின் கிளையிலிருந்து டவுன்ஹால் பகுதியில் உள்ள ஏழு வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 149 கிலோ எடையிலான தங்க கட்டிகளுடன் அந்நிறுவனத்தின் டெம்போ வேன் ஒன்று டவுன்ஹால் நோக்கி சென்று கொண்டிருந்தது. புளியகுளம் பகுதியில் அந்த வாகனத்தை நிறுத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தபோது வாகனத்தின் உள்ளே தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அதற்கான உரிய ஆவணங்களை வாகனத்தில் வந்தவர்கள் சமர்ப்பிக்காததையடுத்து தங்க கட்டிகளுடன் வாகனத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவற்றை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதனிடையே தங்கநகை உற்பத்திக்காக கொண்டு செல்லப்பட்ட நகையை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் 25க்கும் மேற்பட்ட தங்கநகை உற்பத்தியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.மேலும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தங்க நகையை மீட்டுக் கொள்ளலாம் என கூறிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கவே வருமானவரித்துறை அதிகாரிகள் உடனடியாக விரைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அந்நிறுவன ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே தங்கநகை உற்பத்திக்காக கொண்டு செல்லப்பட்ட நகையை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்ததை கண்டித்து இன்று கோவை நகர் முழுவதும் உள்ள தங்க நகை தொழிலாளர்கள் மற்றும் நகை கடை உரிமையாளர்கள் கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். வங்கி மற்றும் வியாபாரத்துக்கு செல்லும் வியாபாரிகளிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணம் மற்றும் இது போன்று பொருட்களை பறிமுதல் செய்வதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க