• Download mobile app
25 Sep 2026, FridayEdition - 3880
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 1419 கடைகளில் ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யும் பணி துவக்கம்

May 25, 2021 தண்டோரா குழு

ரேசன் கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கிய நிலையில் கோவையில் 1419 கடைகளில் ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யும் பணி துவங்கியது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் 31 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே வருவோர் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தளர்வுகளற்ற ஊரடங்கால் ஏழை எளிய மக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக காய்கறி, பழங்கள், முட்டைகளை நடமாடும் வாகனம் மூலம் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் காலை 8 முதல் 12 வரை ரேசன் கடைகள் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் பொருட்களை வாங்காமல் விடுபட்டவர்கள் சென்று பொருட்களை வாங்கி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா நிவாரண நிதி வாங்காதவர்களும் ரேசன் கடைக்கு சென்று வாக்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரேசன் கடைக்கு வருவோர், கட்டாயமாக கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்கும். கோவை மாவட்டத்தில் மொத்த 1,419 கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 10 லட்சத்து 47 ஆயிரம் ரேசன் அட்டை பயணாளிகள் உள்ளனர். கடைக்கும் வரும் பயணாளிகள் கட்டாயமாக கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க