September 17, 2020
தண்டோரா குழு
கோவையில் 13 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 9 ம் வகுப்பு படிக்கும் 13வயது மாணவி காணாமல் போனதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ராமநாதபுரம் போலீசார் மாணவியை தேடி வந்தனர்.மாணவியின் அலைபேசி சிக்னலை கொண்டு அவர் திருப்பூர் பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (20) என்பவர் மாணவியை திருமண ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து வந்தது விசாரனையில் தெரியவந்தது.இதனை தொடர்ந்து மாணவியை மீட்ட போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த 20 வயதான பிரசாந்த் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்ததும்,ஒரு திருமண நிகழ்வின் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருப்பூருக்கு அழைத்து சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து பிரசாந்த் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.