October 14, 2020
தண்டோரா குழு
கோவையில் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது.
கோவை மாவட்டத்தில் 11, 12-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. ஒரு பாடத்தில் தோல்வியடைந்தோருக்கு ஒரே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. எனவே மாணவர்கள் பள்ளியில் வந்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் மட்டும் 11 மற்றும் 12 வகுப்புகளை சேர்ந்த 36 ஆயிரத்து 293 மாணவ மாணவிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ் வந்துள்ளதாகவும், அந்த சான்றிதழ் மாணவர்கள் எழுதிய பள்ளி வாயிலாக கொடுக்கப்பட்டு வருகிறது.கொரோனா காலக்கட்டம் என்பதால் 1 மணி நேரத்திற்கு 30 பேர் என்ற வீதம் கொடுக்கப்பட்டு வருவதாகும் அதிகாரிகள் தெரிவித்தனர்.