• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 11 மையங்களில் 12 ம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் துவக்கம்

May 27, 2020 தண்டோரா குழு

கோவையில் 11 மையங்களில் 12 ம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் துவங்கியது.

இன்று முதல் 12ம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.கோவையில் பாரதி மெட்ரிக் பள்ளி,அவிலா மெட்ரிக் பள்ளி, சிந்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, நேரு வித்யாலயா மெட்ரிக் பள்ளி,லிஸ்யு மெட்ரிக் பள்ளி என 5 மையங்களிலும் பொள்ளாச்சியில் 4 மையங்களிலும்,எஸ்.எஸ்.குளத்தில் 2 மையங்களிலும் ஆக 11 மையங்களில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

விடைத்தாள் திருத்தும் பணிகளில் 3200 ஆசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.கொரொனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வகுப்புகள் தோறும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டும், ஆசிரியர்கள் அனைவருக்கும் கை கழுவ கிருமி நாசினிகள் வழங்கப்பட்டு முக கவசங்கள் வழங்கப்படுகின்றன.மேலும் அவர்கள் வந்து செல்ல 74 அரசு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் அறைக்குள் 8 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளன.மேலும் மையங்களின் கண்காணிக்க மையத்திற்கு 2 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க