July 8, 2020
தண்டோரா குழு
கோவையில் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 927 ஆக உயர்ந்துள்ளது.
கோவையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரேநாளில் 55 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, கோவை மரக்கடை அருகே உள்ள தனியார் எலட்ரிக் கடையில் 7 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதைப்போல் அன்னூர் முதலிபாளையத்தை சேர்ந்த 4 வயது பெண் குழந்தை உள்பட 8 பேர்,
பொள்ளாச்சி நல்லிக்கவுண்டன் பாளையத்தில் உள்ள கால்நடை தீவனம் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது.இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமார் 35க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில், 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
மேலும், எஸ்.எஸ். குளம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன் உள்பட மூன்று பேர், காளம்பாளையத்தை சேர்ந்த இரண்டு பேர், பேரூர் செட்டிப்பாளையத்தை சேர்ந்த ஒரு வயது சிறுமி உள்பட 4 பேர்,பாலமலையை சேர்ந்த 5 பேர்,கருப்பராயன்பாளையத்தை சேர்ந்த இரண்டு பேர், காளப்பட்டி மகாராஜா நகரை சேர்ந்த 50 வயது ஆண், விள்ளாங்குறிச்சி சேர்ந்த 60 வயது ஆண், இடையர்பாளையம் சேர்ந்த 66 வயது ஆண், பீளமேடு சேர்ந்த 52 வயது ஆண், சின்னியம்பாளையத்தை சேர்ந்த 34 வயது ஆண், குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 5 வயது சிறுவன், கே.கே.புதூர் சேர்ந்த 64 வயது பெண், ஜோதி புரத்தை சேர்ந்த 33 வயது பெண் என மொத்தம் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, 33 ஆண்கள், 17 பெண்கள், 5 குழந்தைகள் என 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் இ.எஸ்.ஐ மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் கண்காணிப்பு மையங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 927 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 615 பேர் சிகிச்சையில் உள்ளனர்.