• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 10 மையங்களில் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு 8,055 பேர் எழுதுகின்றனர்

December 7, 2021 தண்டோரா குழு

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு தொடர்பாக ஆட்சியர் சமீரன் தலைமையில் தேர்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது:

இத்தேர்வு வரும் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கோவை மாவட்டத்தில் 10 மையங்களில் 8,055 பேர் தேர்வு எழுத உள்ளனர். காவல் துறையினரால் தேர்வு மையங்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையத்திற்கு தடையில்லா மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு மையங்களுக்கு போதுமான அளவில் புறநகர் பேருந்து நிலையங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் தேர்வர்கள் கொரோனா தொற்று தொடர்பான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துராமலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க