May 31, 2020
தண்டோரா குழு
பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யக் கோரி, கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை உக்கடம் பகுதியில் உள்ள மனிதநேய ஜனநாயக கட்சி அலுவலகம் முன்பு, அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யக் கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது முகக்கவசம் அணிந்தபடி தனி மனித இடைவெளி விட்டு நின்றபடி கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய மறுப்பதாகவும், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள அனைத்து ஆயுள் தண்டனை கைதிகளையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 25 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.