• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை

March 6, 2019 தண்டோரா குழு

கோவையில் ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனம், கடந்த 15 வருடங்கள் மிக அதீத வளர்ச்சியை அடைந்துள்ளது.குறிப்பாக, கோவை அவிநாசி சாலையில் ஹிந்துஸ்தான் கலைக்கல்லூரியை துவங்கிய இந்நிறுவனத்தினர், இதன் அடுத்தபடியாக, கோவை மாலுமிச்சம்பட்டி பகுதியில் 1500 ஏக்கர் பரப்பளவில் பொறியியல் கல்லூரி, கோவை அவிநாசி சாலையில் மிகப்பெரிய மருத்துவமனை மற்றும் விவசாய நிலங்கள் டிராவல்ஸ்,கம்ப்யூட்டர் நிறுவனங்கள் வாங்கினர்.

இந்நிலையில், இன்று காலை 7.30. மணிக்கு கோவை அவிநாசி சாலை கல்லூரி, கல்லூரியின் தாளாளர் கண்ணையன், அவரது மனைவி சரஸ்வதி கண்ணையன், மகள் பிரியா உள்பட அனைவரது வீடுகள் மற்றும் அலுவலங்களில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.இச்சோதனையில் 500 கோடிக்கும் மேற்பட்ட கணக்கில் காட்டப்படாத ஆவணங்கள் மற்றும் பலகோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதும் சோதனைகள் தொடர்கிறது.

மேலும் படிக்க