• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஸ்ரீ அபிராமி கல்வி குழுமத்தின் நிறுவனர் தின விழா

February 25, 2023 தண்டோரா குழு

கோவை அருகே உள்ள ஸ்ரீ அபிராமிகல்வி குழுமத்தின் நிறுவனர் தின விழா இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் முதல்வர் ரேணுகா வரவேற்று பேசினார்.

விழாவுக்கு ஸ்ரீ அபிராமி கல்வி குழுமங்களின் சேர்மன் பெரியசாமி தலைமை தாங்கினார். விழாக்கு இயக்குனர் டாக்டர் குந்தவிதேவி முன்னிலை வகித்தார்.விழாவில் சிறப்பு அழைப்பாளராக கோவை குணியமுத்தூர் பகுதி போலீஸ் உதவி கமிஷனர் ரகுபதி ராஜா கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கிவைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஸ்ரீஅபிராமி கல்வி குழுமங்களை பற்றி கேள்விபட்டுள்ளேன். இங்கு மிக சிறப்பான உள்கட்டமைப்பு வசதி உள்ளது என்றும், சிறந்த மாணவ மாணவிகளை உருவாக்குவதில் திறமையான ஆசிரியர்கள் உள்ளனர் என்றும் கேள்விபட்டு உள்ளேன். இங்கு பயிலும் மாணவ செல்வங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். நீங்கள் எல்லோரும் நன்றாக படித்து முடித்து நல்ல உயர்ந்த நிலைக்கு வர வாழ்த்துக்கள். மேற்கண்டவாறு அவர் கூறினார்.

முன்னதாக விழாவில் டாக்டர் செந்தில்குமார், டாக்டர் உமாதேவி, டாக்டர் பாலமுருகன் டாக்டர் அரவிந்த், டாக்டர் ஜெயபாரதி டாக்டர் நரேஸ் பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க