• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வெகு விமர்சியாக நடைபெற்ற தண்டுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

March 13, 2019 தண்டோரா குழு

கோவையில் காவல் தெய்வமாக இருக்கும் ஸ்ரீ தண்டுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ள மிகப்பழமை வாய்ந்த ஸ்ரீ தண்டுமாரியம்மன் கோவிலானது கோவையை காக்கும் காவல் தெய்வம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலானது புதுப்பிக்கப்பட்டு யாகசாலை பூஜைகள், ஹோமங்கள் ,என பல்வேறு பூஜைகள் ஒரு வார காலமாக நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு கோவிலிகளிலிருந்து தீர்த்தங்கள் எடுத்துவரப்பட்டு கோவில் கோபுரங்களை சுற்றியபடி கலசங்களுக்கு அருள் பாலிக்கும் விதமாக நீர் ஊற்றப்பட்டது .இந்த நன்னீராட்டு பெருவிழாவில் கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் அனைத்து பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.

மேலும் படிக்க