• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வீதி வீதியாக நடந்தே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்

April 12, 2019 தண்டோரா குழு

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் வீதிவீதியாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ச்சுனன் 51 வது வார்டு பகுதியான காந்திபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் வீதிவீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர்,

மத்திய, மாநில அரசுகள் ஒரு புள்ளியில் சந்திக்கும்போது தான் வளர்ச்சி திட்டங்கள் நிறைவேறும். நமது கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது காந்திபுரம் பகுதி செயலாளர் அசோக்குமார், தேமுதிக வார்டு செயலாளர் சீனிவாசன் பகுதி கழக செயலாளர் ஆனந்தகுமார் உட்பட கூட்டணி கட்சிகளை சேர்ந்த பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க