• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வீட்டில் மறைத்து வைத்திருந்த 3 ஜோடி மான் கொம்புகள் பறிமுதல்

September 5, 2020 தண்டோரா குழு

கோவையில் வீட்டில் மறைத்து வைத்திருந்த 3 ஜோடி மான் கொம்புகள் வனத்துறை பறிமுதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வனக் கோட்டத்தில் போளுவாம்பட்டி மேட்டுப்பாளையம் கோவை சிறுமுகை மதுக்கரை காரமடை பெரியநாயக்கன் பாளையம் ஆகிய ஏழு வனச்சரகங்கள் உள்ளன இதில் கோவை, மதுக்கரை பெரியநாயக்கன்பாளையம் சிறுமுகை மேட்டுப்பாளையம் வனச்சரகங்களில் அவுட் காய் எனப்படும் நாட்டு வெடியை பயன்படுத்தி காட்டு பன்றியை வேட்டையாடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

காட்டுப்பன்றிகளுக்கு வைக்கப்படும் நாட்டு வெடியை கடித்து மாடு உள்ளிட்ட கால்நடைகளும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இதனால் பலியாவது தொடர்ந்து வருகிறது. தற்போது கோவை வனச்சரகத்தில் நாட்டு வெடியை கடித்ததில் வாயில் காயம்பட்ட நிலையில் மக்னா யானை சுற்றி வரும் நிலையில் கோவை வனக் கோட்டத்தில் வனத்துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். டாப்சிலிப் பகுதியில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகள் பயன்படுத்தப் படுகிறதா என சோதனையில் ஈடுபட்டனர்.

உதவி வனப்பாதுகாவலர் தினேஷ் மற்றும் செந்தில்குமார் தலைமையில் 7 இடங்களிலும் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.இதில் மதுக்கரை வனச்சரகம் மூங்கில்மட குட்டை என்ற இடத்தில் மோப்ப நாய் உதவியுடன் வனத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது செல்வன் என்பவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று ஜோடி மான் கொம்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அவரிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை வனக் கோட்டத்தில் ஒரே நேரத்தில் 7 நகரங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க