September 7, 2020
தண்டோரா குழு
கோவையில் வீடு வீடாக ஆய்வு நடத்தப்பட உள்ளது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
கோவை மாநகராட்சி பகுதிகளில் #COVID19 தொற்றை கட்டுப்படுத்த வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தப்பட உள்ளது.நோய் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக கண்டறியும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 60 குழுக்களால் காலை, மாலை என இரு வேளைகளில் தினமும் 120 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பரிசோதனைகளை தீவிரப்படுத்த 1,800 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
நாள்தோறும் ஒருவர் 50 வீடுகளில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.முதற்கட்டம் முடிந்தபின் மீண்டும் முதல் வீட்டிலிருந்து ஆய்வுகள் தொடங்கும்.நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனைகள் & #COVID19 சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்படுவார்கள்.அறிகுறி இல்லாமல் நோய் பாதிக்கப்பட்டோர் அரசின் வழிமுறைகளை பின்பற்றி 14 நாட்களுக்கு தேவையான மருந்துகளோடு வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு கூறியுள்ளார்.