• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை

May 6, 2019 தண்டோரா குழு

கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சாய்பாபாகாலனி மற்றும் குனியமுத்தூர் போன்ற பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சாய்பாபாகாலனி அருகேயுள்ள வெங்கிட்டாபுரத்தை சேர்ந்தவர் பழனிசாமி (50). இவர் கடந்த 30-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சேலம் சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த 15 பவுன் நகை மற்றும் ரொக்கம் ஒரு லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் பழனிச்சாமி சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இந்த சம்பவம் தொடர்பாக சாய்பாபா காலனி குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

அதேபோல, குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரம் அருகேயுள்ள 6-வது வீதியை சேர்ந்த முகமதுயூனீஸ் (38) என்பவர் கடந்த 1-ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றார். பின்னர், வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 10 பவுன் நகை, ரூ. 40 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளை போயுள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும், விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டதிலிருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதும், அதேபோல விடுமுறை நாட்களை கழிப்பதற்காக வெளியூர்களுக்கு சுற்றுலா செல்வதும் வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், குடியிருப்புவாசிகள் வெளியூர் செல்வதை அறிந்து, கொள்ளையர்கள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே, வெளியூர் செல்பவர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து விட்டு, தங்கள் பயணத்தை தொடர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுப்பதுடன், காவல்துறையினர் ரோந்து பணிகளை அதிகரிப்பதின் மூலம் குற்ற சம்பவங்களை தடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்

மேலும் படிக்க