• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் விற்பனைக்கு வந்த 57 கிலோ எடையுள்ள ‘டைகர் ஃபிஷ்’!

May 16, 2020 தண்டோரா குழு

கோவையில் 57 கிலோ எடையுள்ள ‘டைகர் ஃபிஷ்’விற்பனைக்கு வந்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பொதுமுடக்கம் நாடு முழுவதும் அமலில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் ஊரடங்கு தளர்வு நடைமுறைபடுத்தப்பட்ட நிலையில் கடைகளில் வியாபாரம் நடந்து வருகின்றது.

அந்த வகையில் மீன்கடைகளில் வெளிமாவட்டங்களில் இருந்து மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது.ஏற்றுமதிக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படாத நிலையில் அந்த வகை மீன்களும் கோவைக்கு விற்பனைக்கு வருகின்றது.இந்நிலையில் இன்று கோவையில் உள்ள மீன் கடை ஒன்றுக்கு ’டைகர் ஃபிஷ்’ எனப்படும் வகையைச் சேர்ந்த ஏற்றுமதி அதிகம் செய்யப்படும் மீன் விற்பனைக்கு வந்தது.

இது குறித்து கடை உரிமையாளர் கூறுகையில்,

வழக்கமாக வஞ்சிரம், வாவால் போன்ற மீன் வகைகள் விற்பனைக்கு வரும். தற்போது ஏற்றுமதி இல்லாததால் இந்த மீன் இங்கு விற்பனைக்கு வந்திருக்கிறது.இந்த மீன் கிலோ 1000 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலையில்,இங்கு கிலோ வெறும் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்தார்.

57 கிலோ எடை கொண்ட பிரமாண்டமான தோற்றம் கொண்ட இந்த மீனை பொது மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

மேலும் படிக்க