• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

October 3, 2020 தண்டோரா குழு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் பெண் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து கோவையில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உத்திரபிரதேச மாநிலத்தில் தலித் இன பெண் கொடூரமாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பலரும் கூறி வந்த நிலையில், அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று உத்தரபிரதேச காவல்துறையினரால் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில்,காவல் துறையினர் கூறியதை கண்டித்தும்,சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், என்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, கரும்புக்கடை பகுதியில் SDPI கட்சியின் மகளிர் அணியான விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சாஜிதா மாவட்ட துணை தலைவர் கதீஜா பொருளாளர் மைமுனா மற்றும் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்தேசிய செயலாளர் சர்மிளா பானு,மாவட்டதலைவர் நஸீமா SDPI கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் A.A.அப்துல் காதர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

மேலும் படிக்க