• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி அளிக்க கோரி இந்து அமைப்புகள் போராட்டம்

September 2, 2021 தண்டோரா குழு

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்க கோரி இந்து அமைப்புகள் உண்ணாவிரதம் இருக்க முயற்சி மேற்கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது‌.

கொரனா பரவல் குறைந்திருக்கிறது தற்போதைய சூழலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த காலங்களைப் போல இந்த ஆண்டும் நடத்த வேண்டும் என இந்து முன்னணி இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரத்தில் விநாயகர் கோவில் முன்பு இந்து மக்கள் புரட்சிப்படை தலைமையில் உண்ணாவிரதம் மேற்கொள்ள முயற்சி மேற்கொண்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அனுமதி மீறி உண்ணாவிரதம் இருக்கக்கூடாது என தடுத்ததால் உண்ணாவிரதம் கைவிடப் பட்டது.

மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தக்கூடாது என்ற ஹிந்து விரோத போக்கை திமுக அரசு கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டிய இந்து அமைப்பினர், இதே போக்கை தொடர்ந்து கடை பிடித்தால் அடுத்த கட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் படிக்க