• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் விடிய விடிய பெய்த மழை – சாலையில் தேங்கிய நீரை அகற்றும் பணி தீவிரம் !

November 8, 2021 தண்டோரா குழு

கோவையில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக உப்பிலிபாளையம் மேம்பாலம் மற்றும் கிக்கானி பள்ளி ஆகிய இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கோவையில் நேற்று தொடர் மழை பெய்தது .குறிப்பாக நள்ளிரவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழை காரணமாக முக்கிய சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியது. குறிப்பாக உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியில் மழைநீர் தேங்கியதன் காரணமாக, சுரங்கப் பாதையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதேபோல மேட்டுப்பாளையம் சாலையில் கிக்கானி மேல்நிலைப் பள்ளியின் அருகில் ரயில்வே பாலத்தின் கீழ் பகுதியிலும் மழை நீர் தேங்கியது. இதன் காரணமாக அந்தப் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு தேங்கியுள்ள மழை தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க