• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் நலத்திட்ட உதவி

June 22, 2019 தண்டோரா குழு

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் இலவச தங்க மோதிரம் வழங்கப்பட்டு, கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க மாணவரணியினர் வழங்கினர்.

நடிகர் விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்க மாவட்ட மாணவரணி சார்பில் கோவையின் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விஜய் மக்கள் இயக்க மாணவரணி கோவை மாவட்ட தலைவர் பாபு தலைமையில் முன்னதாக ஏ.கே.எஸ். நகர் பகுதியில் உள்ள சவுடேஸ்வரி கோவிலில் 101 தேங்காய்கள் உடைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து,NGGO காலனியில் உள்ள சரணாலயம் ஆசிரமத்தில் காலை உணவு வழங்கி, முதியோர்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்பட்டது.இதே போல செட்டிபாளையம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்திற்கு ஒரு மாதம் தேவையான மளிகை சாமான்களையைம் வழங்கினர். தொடர்ந்து புரூக்பீல்டு சாலையில் ஆதரவற்ற மாற்றுத்திறனாளி முதியோர் ஒருவருக்கு சிறு தொழில் செய்யும் வகையில் சிறிய பெட்டிக்கடையை அமைத்து கொடுத்தனர்.
பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் கோவை மேற்கு நகர மாணவரணி சார்பாக தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டது.முன்னதாக சாய்பாபா காலனி மார்க்கெட்டில் 45 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர்.அதனை தொடர்ந்து சோமனூர்,இடையர் வீதி,சாய்பாபா காலனி,மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நடிகர் விஜய் மன்ற பெயர் பலகைகள் திறக்கப்பட்டு பல்வேறு இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர் அந்த பகுதிகளை சேர்ந்த ,100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு குடங்கள், மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் பேனா ஸ்கூல் பேக் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் தேன் குமார்,பூமார்க்கெட் கார்த்தி, ரியாஸ், நயீம்,செல்வம்,விஜயகோபால்,செந்தில்,நவீன்,பிரசாத்,மணிகண்டன்,கிரேஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குறிப்பாக இன்று ஒரு நாள் மட்டும் ஆட்டோவில் வயது மூத்தோர்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் இலவச சேவையும் மாணவரணி சார்பாக துவங்கப்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க