• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் விஜய்யின் புகைப்படங்களை கிழித்து இறைச்சி வியாபாரிகள் போராட்டம்

September 23, 2019

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இறைச்சி வியாபாரிகளை இழிவுபடுத்தும் வகையில் நடிகர் விஜய்யின் பிகில் திரைப்பட போஸ்டர் வெளியிட்டதாக கூறி, நடிகர் விஜய்யின் புகைப்படங்களை கிழித்து இறைச்சி வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மீன் மற்றும் இறைச்சி வியாபாரிகள் நடிகர் விஜய்யின் பிகில் திரைப்பட புகைப்படங்களை கிழித்து போராட்டம் நடத்தினர். பிகில் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இறைச்சி வியாபாரிகளை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும், முட்டி மற்றும் கத்தி மீது செருப்புக்கால் வைத்திருப்பது தங்களது மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் இறைச்சி வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீஸ்க்கு ஏஜிஎஸ் நிறுவனம் நியாயப்படுத்தி பதிலளித்து இருப்பதாகவும், இசை வெளியீட்டு விழாவில் தமிழக அரசிற்கு அறிவுரை கூறும் அளவிற்கு நடிகர் விஜய்க்கு தகுதியில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் இறைச்சி வியாபாரிகளை இழிவுப்படுத்தும் காட்சிகளை நீக்க வேண்டுமெனவும், இல்லையெனில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமெனவும் கூறிய இறைச்சி வியாபாரிகள், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க