• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரம்

April 17, 2019 தண்டோரா குழு

17வது மக்களவை தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 17வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவையில் வாக்குச்சாவடிகளில் வாக்களுப்பதற்கான இயந்திரங்கள், வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் பாதுகாப்பு அலுவலர்களை ஒருங்கிணைக்கும் பணி கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள பி.ஆர்.எஸ். மைதானத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு புரம் வாக்குச்சாவடிக்கு தேவையான இயந்திரங்கள், பாதுகாப்பு பணியாளர்களை அனுப்பும் வாகனங்கள் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு, அவினாசி, உடுமலைப்பேட்டை என 8 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையத்திற்கு 181 தவிர 8 கூடுதலாக வாகனம் என மொத்தம் 189 வாகனங்கள் உள்ளது. இந்த வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொறுத்தி கண்காணிக்கப்பட உள்ளது.

மறுபுறம், வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் பணியாற்றும் அலுவலர்களை ஒருங்கிணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கோவை மாவட்ட மற்றும் மாநகர காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் , என்.எஸ்.எஸ்., மாணவர்கள், ஓய்வுப்பெற்ற இராணுவ வீரர்கள், காவல்துறையினர் இந்த பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இன்று மதியத்திற்குள் இந்த வாகனங்கள் இயந்திரங்கள், அலுவலர்கலுடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட உள்ளது. கோவையில் 3070 வாக்குச்சாவடிகளில் 470 வாக்குச்சாவடி பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் படிக்க