• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வாகன ஓட்டியின் கஷ்டத்தை புரிந்து உதவிய மனிதநேயமிக்க காவலர்

December 20, 2018 வை.கெளதம்

நாம் தினமும் வாகனத்தில் வேளைக்கு வெளிய செல்லும்போது பத்திரமாக செல்லவேண்டும் என்று நினைக்கும் நாம் சரியான ஆவணகளை எடுத்து செல்கிறோமா என்று நினைப்பதில்லை. ஒருவேளை ஆவணகளை மறந்தாலோ அல்லது புதுப்பிக்க தவறிவிட்டலோ சாலை மார்க்கமாக நிற்கும் போக்குவரத்து போலீசாரிடம் மாட்டிவிடக்கூடாது என்று தப்பித்து செல்ல தான் பார்ப்போம்.

வாகனம் ஓட்டும்போது உரிய ஆவணங்கள் எடுத்து செல்ல வேண்டும் என்று சட்டம் இருந்தும் பெரும்பாலும் பலர் அதனை மதிப்பதில்லை. எனினும் சிலர் ஆவணங்களை வீட்டில் மறந்து வைத்து விடுவார்கள். அப்படி ஒருவேளை போலீசாரிடம் மாட்டிவிட்டால் அவர்களை மனதிற்குள் வசைபாடி அபராதம் செலுத்தி செல்வோம். ஏனெனில் நம் கஷ்டங்களை புரிந்து கொள்ளாமல் அபராதம் விதிக்கிரார்களே என்று தான். ஆனால், காக்கி சட்டைக்குள்ளும் ஈரம் உண்டும் என்பதை நிரூபிக்கும் வகையில் கோவையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கோவை சிங்காநல்லூர் போக்குவரத்து எஸ்.ஐ முருகன் மற்றும் போலீசார் திருச்சி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியில் வந்த கடலூரை சேர்ந்த சரவணனின் வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்துள்ளனர். அப்போது அவரது வாகத்தின் இன்சூரன்ஸ் முடிந்து இருப்பதை அறிந்த போலீசார் அவருக்கு அபராதம் வித்துள்ளனர். பின்னர் அவரிடம் பணம் இல்லாததால் போக்குவரத்து உதவி ஆய்வாளர் முருகன் தன் சொந்த பணத்தில் அவருக்கு இன்சூரன்ஸ் போட்டுக்கொடுத்துள்ளார்.

இது குறித்து போக்குவரத்து எஸ்.ஐ.முருகனிடம் கேட்டபோது,

எப்பொழுது போல் வாகனம் ஆய்வு சோதனையில் ஈடுபட்டோம். அப்போது அவ்வழியாக வந்த சரவணனை ஆய்வு செய்கையில் அவர் இன்சூரன்ஸ் தேதி முடிந்து இருந்தது தெரியவந்தது. அதனால் 5௦௦ ரூபாய் அபராதம் கட்டுமாறு கூறினேன். காசு இல்லை என்றார். நான் அவரை கட்டி விட்டு தான் செல்லவேண்டும் என்று கூறினேன். உடனே அவர் காசு இல்லை அழ தொடங்கிவிட்டார். அதற்கு ஏன் அழுகிறாய் என்று கேட்டேன். அதற்கு நான் கடலூரை சேர்ந்தவன். என் மனைவி பெயர் சுதா சொந்த ஊர் மூணார் பெற்றோர் சம்மந்தமின்றி திருமணம் செய்து கோவையில் வசித்து வருகிறோம். நான் கூலி வேலை செய்து தான் வாழ்கிறேன். இப்பொழுது என் மனைவிக்கு உடம்பு சரியில்லாமல் கடன் வாங்கி 4 லட்சம் செலவு செய்து மருத்துவம் பார்த்து வருகிறேன் என அழுதார்.
பின்னர் அவரது மனைவிக்கு போன் செய்து இதை உறுதிபடுத்தினேன். பிறகு நான் ஒரு 5௦௦ ருபாய் கொடுக்கலாம் என்று யோசிதேன். ஆனால் நான் கொடுத்து இன்சூரன்ஸ் போடாமல் வேற செலவுக்கு செலவுவிட்டால் என்ன செய்வது என்று நினைத்தேன். அதன்பின் அவரிடம் உனக்கு ஒரு வருடத்திற்கு இன்சூரன்ஸ் போட்டு தருகிறேன் என்று சொனேன் அவரும் சரி என்றார். நான் என் நண்பன் இன்சூரன்ஸ் முகவர் சிவாகுமாரை தொடர்புகொண்டு பேசி இன்சூரன்ஸ் போட்டுகொடுத்தேன் என்றார்.

காவல் அதிகாரிகள் எப்பொழுது மக்களின் நண்பன் தான் என்பது இது ஒரு எடுத்துக்காட்டு.

மேலும் படிக்க